எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
 

தமன்கடுவை பிரதேச செயலகப் பிரிவூ

                உன்னத இலங்கையின் ரஜரடபுரத்தின் அழகுமிகு பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள 07 பிரதேச செயலக பிரிவூகளுள் ஒன்றான தமன்கடுவை பிரதேச செயலகப் பிரிவானது வரலாற்றுப் பின்னணியூம் பெருமையூம் தன்னகத்தே கொண்டுள்ளது. வடக்கே லங்காபுர மற்றும் ஹிங்குரக்கொடை பிரதேச செயலகப் பிரிவூகளையூம் கிழக்கே திம்புலாகல மற்றும் வெலிகந்தை பிரதேச செயலகப் பிரிவூகளையூம் தெற்கே மகாவலி கங்கைக்கு அப்பால் மாத்தளை மாவட்டத்தையூம் மேற்கே எலஹர மற்றும் ஹிங்குரக்கொடை பிரதேச செயலகப் பிரிவூகளையூம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

                பிரதானமாக உலகப் பிரசித்திபெற்ற பொலன்னறுவை வட்டதாகஇ கல்விஹாரை மற்றும் பெரகும் சிலை உள்ளிட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற புனித தலங்களையூம் முழு இலங்கையையூம் தன்னிறைவூ காணச்செய்யூம் மிகவூம் நீளமான மகாவலி கங்கைக்கும் சிறப்புமிகு பராக்கிரம சமுத்திரத்திற்கும் பாரம்பரியம் பாடும் தமன்கடுவை கல்விஇ பொருளாதாரம்இ கலாசாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற யாவற்றிலும் பூரணமடைந்து துரித அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

                மாவட்டத்தின் பிரதான நிருவாக நகரம் அமையப்பெற்றுள்ள தமன்கடுவையில் பொலன்னறுவை மாவட்ட செயலகம் (கச்சேரி)இ நீதிமன்ற கட்டடத் தொகுதிஇ சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்இ மாவட்ட தேர்தல்கள் அலுவலகம்இ ரோயல் மத்திய கல்லூரிஇ நிர்மாணிக்கப்பட்டு வரும் மும்மொழிப் பாடசாலைஇ பொலன்னறுவை பொது வைத்தியசாலைஇ நிர்மாணிக்கப்பட்டு வரும் தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலைஇ கல்லளை தேசிய விளையாட்டரங்கம்இ மாவட்ட விவசாய அலுவலகம் அடங்கலாக அரச நிருவாகத்தின் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் அமைந்துள்ளன. 466.3 சதுர கிலோ மீட்டர் விஸ்தீரணமுடைய தமன்கடுவை பிரதேச செயலகப் பிரிவில் 87,465 பேர் வசிக்கின்றனர்.

                பொலன்னறுவை வரலாற்றில் முதன் முதலாக 2018ஆம் ஆண்டில் தமன்கடுவை பிரதேச செயலகப் பிரிவிற்குள் மாநகர சபை உருவாக்கப்பட்ட அதேவேளை அதுவரை காணப்பட்ட தமன்கடுவை பிரதேச சபையானது பொலன்னறுவை மாநகர சபை மற்றும் பொலன்னறுவை பிரதேச சபை எனப் பிரிக்கப்பட்டு பொலன்னறுவை அபிவிருத்தி பயணத்தில் புதிய காலடி வைத்துள்ளது.

 

தமன்கடுவை வரலாறு

                அநுராதபுர மன்னர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கி.மு. 1055 இலிருந்து உருவான பொலன்னறுவை இராசதானி யூகமானது மிகச் செழிப்படைந்தும் தன்னிறைவூ அடைந்தும் பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறந்தும் காணப்பட்டமையானது இலங்கை வரலாற்றிலேயே மிகவூம் முக்கியத்துவமான இடத்தைப் பிடித்திருந்தது. விஜயபாகு மன்னன்இ மகா பராக்கிரமபாகு மன்னன்இ நிஸ்ஸங்கமல்லன் மன்னன் ஆகியோரைப் போன்று லீலாவதி மற்றும் கல்யாணவதி போன்ற அரசிகளும் ஆட்சிபுரிந்தனர். பிற்காலத்தில் ஏற்பட்ட பலவீனமான ஆட்சி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட காலிங்க மாக மன்னன் கி.மு. 1214 இல் இந்தியாவிலிருந்து வருகை தந்து பொலன்னறுவையை ஆண்டு வந்ததுடன் இலங்கையின் இதயம் என வர்ணிக்கப்பட்ட ரஜரட்டையையூம் ஆரம்ப காலத்தில் காணப்பட்ட விகாரைகள் மற்றும் கட்டடங்கள் யாவூம் அவனால்  அழித்தொழிக்கப்பட்டன. அதர்மஇ குரூர ஆட்சியாளனாகச் செயற்பட்ட அவன் பொன்னான பொலன்னறுவை இராசதானியை துவசம் செய்தான். அதன் பின்னர்இ படிப்படியாக இராதானி தெற்கு நோக்கி நகரத் தொடங்கியது.

                இலங்கையின் இறுதி இராசதானியான கண்டி ஆட்சியில் தமன்கடுவை பிரதேசமானது பிரசித்திபெற்ற நிருவாக ஆட்சி பிரதேசமாக விளங்கியது. கி.பி. 1815இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட தமன்கடுவை பிரதேசம் ஓர் நிருவாக அலகாக விளங்கியது. 1953 இல் ஏற்படுத்தப்பட்ட நிருவாக அதிகாரப் பிரதேச மறுதீரமைப்பின் கீழ் பொலன்னறுவை மாவட்டம் தாபிக்கப்பட்டது. அதன் விளைவாக தமன்கடுவை மற்றும் சிங்கள பற்று என இரு பிரதேச இறைவரி உத்தியோகத்தர் பிரிவூகள் உருவாக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டில் பொலன்னறுவை மாவட்டத்தில் நிருவாகப் பிரிவூகளாக தமன்கடுவைஇ ஹிங்குரக்கொடைஇ லங்காபுரஇ மெதிரிகிரிய மற்றும் எலஹர என பிரிவூகள் மேலும் பிரித்தொதுக்கப்பட்டன.

                அதன் பின்னர்இ 1988ஆம் ஆண்டில் தமன்கடுவை உதவி அரசாங்க அதிபர் பிரிவூ என்றழைக்கப்பட்ட நிருவாக அலகு மேலும் தமன்கடுவை மற்றும் திம்புலாகல என இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 13ஆம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் அதுவரை அழைக்கப்பட்டு வந்த உதவி அரசாங்க அதிபர் நிருவாகப் பிரிவூ தமன்கடுவை பிரதேச செயலகப் பிரிவூ எனத் திருத்தஞ்செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமன்கடுவை பிரதேச செயலகப் பிரிவில் 55 கிராம உத்தியோகத்தர் பிரிவூகளாக கிராமிய நிருவாகத்திற்காகப் பிரித்தொதுக்கப்பட்டு இம்மாவட்டத்திலேயே முன்னணி வகித்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

                தமன்கடுவை நிருவாக அதிகார பிரதேசத்தில் அன்றிலிருந்து இன்றுவரை சேவையாற்றியஇ சேவையாற்றிக்கொண்டிருக்கும் ரட்டே மகத்தயாஃ அரசாங்க அதிபர்ஃ பிரதேச இறைவரி உத்தியோகத்தர்ஃ உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களின் பெயர் அட்டவணை.

 

              
 
 
 
Name list of previously served and presently serving as Rate Mahatthaya/ Divisional Revenue Officer/
Assistant Government Agent and Divisional Secretaries are as follows.
 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top